லெஸ்டர்: முந்தைய பருவத்தில் 'ரெலிகேஷன்' நிலையிலிருந்து தப்பிப் பிழைத்ததே பெரும்பாடு என்ற நிலையில் இருந்த லெஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவைக் கடந்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் பட்டம் வெல்ல வைத்து உச்சாணிக் கொம்பில் ஏற்றிய பெருமை அதன் நிர்வாகியாக இருந்த கிளாடியோ ரனியேரியை (படம்) சேரும். அடுத்தடுத்து தோல்வி களைச் சந்தித்து வரும் நிலையில் 65 வயது ரனியேரியை நிர்வாகி பதவியிலிருந்து நீக்குவதாக நேற்று முன்தினம் லெஸ்டர் குழு அறிவித்தது.
லெஸ்டர் சிட்டி நிர்வாகி பதவிநீக்கம்
1 mins read
-

