போக்பாவைத் தாக்கிய ரசிகர்கள்

போக்பாவைத் தாக்கிய ரசிகர்கள்

1 mins read
04d085a1-b4fe-431b-9558-5f6e54a7d9de
-

மான்செஸ்டர்: லீக் கிண்ணம் வென்ற மேன்யூ காற்பந்துக் குழு வீரர் பால் போக்பா (படம்) உணவக விடுதி ஒன்றில் ரசிகர்களால் தாக்கப்பட் டார். 'ஆட்டோகிராப்' எனும் கையெழுத்திட போக்பா மறுத்த தால் கோபமடைந்த ரசிகர்கள் அவரைத் தாக்கினர். 'அக்பர்' எனும் இந்திய உண வகத்தில் நடந்த இச்சம்பவத்தின் போது அவர் மீது தட்டு வீசி யெறியப்பட்டதாகவும் 'தி சன்' ஊடக செய்தி தெரிவித்தது. தனது நண்பர்களுடம் உண வருந்திக் கொண்டிருந்த போக்பா விடம் அதே விடுதியில் உண வருந்திக் கொண்டிருந்த ரசிகர் கள் ஆட்டோகிராப் கேட்டதற்கு நாகரிகமாக அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், கோபமடைந்த ரசிகர் கள் அவரைத் மரியாதை தெரி யாதவர் என்று குற்றம்சாட்டிய தோடு மட்டுமல்லாமல், தாக்கவும் செய்தனர்.

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg