வெற்றியுடன் துவங்கிய வாரியர்ஸ்

வெற்றியுடன் துவங்கிய வாரியர்ஸ்

1 mins read

எஸ் லீக் காற்பந்து ஆட்டம் ஒன்றில் வாரியர்ஸ் குழு வெற்றி பெற்றது. முதல் கோலை பாலஸ்தியர் குழு போட்டாலும் கடைசி கோலைப் போட்டு வெற்றியை ருசித்தது வாரியர்ஸ் குழு. ஆட்ட நேரத்தின்போது தங்க ளுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்புகளைப் பயன்படுத்தி இரு குழுக்களுமே தங்களது தரப்புக்கு ஒரு கோல் போட்டன. அதன்பிறகு கோல் எதுவும் விழாததால் ஆட்டம் சமநிலையில் முடியக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 88வது நிமிடத்தில் சைஃபுல் இஷா ஒரு கோலைப் போட வாரியர்ஸ் குழு 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகளுக்கு: epaper.tamilmurasu.com.sg