எஃப்ஏ கிண்ணம்: காலிறுதியில் சிட்டி

எஃப்ஏ கிண்ணம்: காலிறுதியில் சிட்டி

1 mins read

மான்செஸ்டர்: இங்கிலாந்தின் எஃப்ஏ கிண்ணக் கால் இறுதிக்கு மான்செஸ்டர் சிட்டி குழு தகுதி பெற்றுள்ளது. அது நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ஹடர்ஸ்ஃபீல்ட் டவுன் குழுவை 5-=1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இரு குழுக்களும் ஏற்கெனவே சந்தித்திருந்தன. ஆனால் அந்த ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் மீண்டும் இரு குழுக்களும் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. இம்முறை முதல் கோலை ஹடர்ஸ்ஃபீல்ட் போட்டு சிட்டி ஆட்டக்காரர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஆனால் முதல் பாதி ஆட்டத்தின்போது எட்டு நிமிட இடைவெளியில் மொத்தம் மூன்று கோல்களைப் போட்டது சிட்டி.