நட்புமுறை ஆட்டத்தில் மோதும் சிங்கப்பூர் குழு

நட்புமுறை ஆட்டத்தில் மோதும் சிங்கப்பூர் குழு

1 mins read

தோகா: 2019 ஆசிய கிண்ணப் போட்டிகளுக்கான மூன்றாம் சுற்று தகுதிச் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூர்க் காற்பந்துக் குழு இம்மாதம் 28ஆம் தேதி பஹ்ரேனுடன் மோதவிருக்கிறது. அப்போட்டிக்கு ஆயத்தமாகும் விதமாக அதற்குமுன் அனைத் துலக நட்புமுறை ஆட்டமொன்றில் சிங்கப்பூர்க் குழு மோத விரும்பு கிறது. இதன்படி, வரும் 23ஆம் தேதி தோஹாவில் ஆப்கானிஸ் தான் அல்லது ஏமனை சிங்கப் பூர்க் குழு எதிர்த்தாடும். "தோஹாவில் விளையாடுவது பஹ்ரேனுடனான மோதலுக்கு நல்ல பயிற்சியாக அமையும்," என்றார் தேசிய குழுவின் இடைக்காலப் பயிற்றுவிப்பாளர் வி.சுந்தரமூர்த்தி. "பஹ்ரேன் வலுவான குழு. ஆயினும், நாங்கள் ஒரு குழுவாக இணைந்து விளையாடும் பட்சத் தில் நல்ல முடிவுடன் தகுதிச் சுற்றுப் பயணத்தைத் தொடங்க லாம்," என்று சுந்தரம் கூறினார். வரும் 13ஆம் தேதி முதல் சிங்கப்பூர் வீரர்களுக்கான பயிற்சி முகாம் தொடங்கவுள்ள நிலையில் கேலாங்கில் நேற்று அவர்கள் ஒன்றுகூடினர்.