விக்கெட்டுகளைச் சாய்த்த ஹெராத்; இலங்கை வெற்றி

விக்கெட்டுகளைச் சாய்த்த ஹெராத்; இலங்கை வெற்றி

1 mins read

காலே: இலங்கை, பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 259 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 494 ஓட்டங்கள் குவித்தது இலங்கை அணி. பின்னர் முதல் இன் னிங்சை தொடங்கிய பங்ளாதேஷ் அணி 312 ஓட்டங்கள் சேர்த்தது. 172 ஓட்டங்கள் முன்னிலை யுடன் இலங்கை அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் உபுல் தரங்கா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இலங்கை அணி 69 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்கள் எடுத்திருக்கும்போது 2வது இன்னிங்சை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.