ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ்

ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ்

1 mins read

புதுடெல்லி: ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்குப் போட்டி கள் கொண்ட தொடரில் விளை யாடி வருகிறது. புனேவில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் பெங்களூரில் நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் 1=1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி வருகிற 16ஆம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலி யாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டார்க் 2வது டெஸ்ட்டின்போது வலது காலில் காயம் அடைந்தார்.