நோம்பென்: கம்போடியாவுடனான அனைத்துலக நட்புமுறை காற் பந்து ஆட்டத்தில் இந்திய அணி 3=2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. 36வது நிமிடத்தில் இந்திய அணியின் சுனில் சேத்ரி முதல் கோலைப் புகுத்தினார். அதற்கு உடனே பதிலடி கொடுத்து சமன் செய்தது கம்போடியா. அந்த அணியின் குவான் 37வது நிமிடத்தில் கோல் அடித்ததால், 1=1 என சமநிலை பெற்றது. அதன்பின்னர் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் போடவில்லை. இரண்டாவது பாதியில் இந்தியா மேலும் இரண்டு கோல் களைப் புகுத்தியது. ஆனால், கம்போடியா ஒரு கோல் மட்டுமே போட, 3=2 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
கம்போடியாவை வீழ்த்தியது இந்திய அணி
1 mins read

