கோஹ்லி கேள்விக்குறி

கோஹ்லி கேள்விக்குறி

1 mins read

தர்ம்சாலா: தோள்பட்டை காயத் திலிருந்து இன்னும் முழுவதும் தேறாததால் ஆஸி. அணிக்கு எதிராக இன்று தொடங்கவுள்ள கடைசி, 4வது டெஸ்ட் போட்டி யில் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது. 100% உடற்தகுதியுடன் இருந்தால் மட் டுமே விளையாடுவேன் என்று கோஹ்லி அறிவித்துள்ளார். இதையடுத்து, முன்னெச்சரிக்கை யாக மும்பை அணியின் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 எனச் சமநிலையில் உள்ளதால் இந்த ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.