தோகா: கத்தாரில் நேற்று முன் தினம் நடந்த நட்புமுறைக் காற் பந்து ஆட்டத்தில் சிங்கப்பூர் குழு 1-2 என்ற கோல் கணக்கில் ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது. ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே கோலடித்து ஆப்கான் முன்னிலை பெற்றது. 47வது நிமிடத்தில் பதில் கோலடித்து ஆட்டத்தைச் சமன் படுத்தினார் சிங்கப்பூரின் ஷவால் அன்வார். ஆயினும் அடுத்த 11வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலடித்து ஆப்கான் வென்றது. அடுத்து, ஆசிய கிண்ணத் தகுதிச் சுற்றில் வரும் செவ்வாயன்று சிங்கப்பூர் குழு பஹ்ரேனை எதிர்கொள்கிறது.
சிங்கப்பூர் தோல்வி
1 mins read

