தமிழில் ஐபிஎல் போட்டி வர்ணனை

தமிழில் ஐபிஎல் போட்டி வர்ணனை

1 mins read

சென்னை: பத்தாவது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 5ஆம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையை சோனி தொலைக்காட்சி குழுமம் பெற்றுள்ளது. போட்டிகள் ஆங்கிலம் மற்றும் இந்தி வர்ணனையுடன் ஒளிபரப்பப்படுவது வழக்கமாகும். வட்டார ரசிகர்களையும் அதிகம் கவரும் வகையில் பிற மொழிகளிலும் இந்தப் போட்டியை ஒளிபரப்ப சோனி குழுமம் முடிவு செய்துள்ளது. தமிழ், வங்காளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வர்ணனையுடன் சோனி இ.எஸ்.பி.என். மற்றும் சோனி இ.எஸ்.பி.என். எச்.டி. ஒளியலைகளில் இந்தப் போட்டி ஒளிபரப்பாகும்.