ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிங்கப்பூர் காற்பந்து சங்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடப் போகும் இரு தரப்பு வேட்பாளர்களின் விவரங்கள் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தப்பட்டன. அதன்படி லிம் கியா தோங் அணி, பில் இங் அணி என இரு அணியினர் தரப்பிலும் தனி வேட்பாளர்களாகவும் காற்பந்து ஆர்வலர்கள் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். லிம் தரப்பில் ரஸாலி சாஆட், லிம் டொங் ஹாய், யாக் கோப் ஹஷிம் முதலிய முன்னாள் தேசிய ஆட்டக்காரர்கள் உள்ளனர். பில் இங் தரப்பில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு உதவித் தலைவர்களில் இருவர் பெண்களாக உள்ளனர். காற்பந்து நிர்வாகத்தில் பெண்களும் முக்கிய இடம் வகிக்கவேண்டும் எனும் அடிப்படையில் அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று பேசப்படுகிறது.
காற்பந்துச் சங்கத் தேர்தலில் இருதரப்பு வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு
1 mins read

