தொடரை வென்றது இந்தியா

தொடரை வென்றது இந்தியா

1 mins read
1decf188-d884-4827-aac6-cb21378acc29
-

தர்மசாலா: கடைசி, நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 2-1 என்ற கணக்கில் தொடரைத் தனதாக்கியது இந்திய கிரிக்கெட் அணி. தோள்பட்டை காயம் காரணமாக விராத் கோஹ்லி விலகியதால் அணித்தலைவராகப் பொறுப்பேற் றார் அஜின்கிய ரகானே. கோஹ்லிக்குப் பதிலாக அறிமுக வீரராக குல்தீப் யாதவும் இஷாந்த் சர்மாவுக்குப் பதிலாக புவனேஸ்வர் குமாரும் இந்திய அணியில் இடம்பெற்றனர். ஆஸி. அணியைப் பொறுத்தமட்டில் 3வது போட்டியில் இடம்பெற்றவர்களே கடைசிப் போட்டியிலும் ஆடினர்.

பார்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியினர். படம்: ஏஎஃப்பி