சமநிலை கண்ட சிங்கப்பூர்

சமநிலை கண்ட சிங்கப்பூர்

1 mins read

சிங்கப்பூர்: ஆசியக் கிண்ணப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியின் மூன்றாவது சுற்றில், பஹ்ரைனுக்கு எதிரான போட் டியைச் சமநிலையில் முடித்தது சிங்கப்பூர். கடைசியாக நடந்த மூன்று ஆட்டங்கள் மட்டுமல்லாமல், பஹ்ரைனுடனான கடைசி ஏழு ஆட்டங்களிலும் சிங்கப்பூர் தோல்வியைச் சந்தித்தது. இந்நிலையில், பஹ்ரைனை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட சிங்கப்பூர் 0-0 என்ற கோல் கணக்கில் சம நிலை கண்டது. பயிற்றுவிப்பாளர் வி.சுந்தர மூர்த்தி வகுத்த வியூகத்தின்படி சிறப்பாக விளையாடிய சிங்கப் பூர், இதனால் ஒரு புள்ளி பெற் றது. ஜூன் 10ஆம் தேதி தைவானைச் சந்திக்கிறது சிங்கப்பூர். 'ஏ' பிரிவில் நடந்த மற்றோர் ஆட்டத்தில் மியன்மாரை 0-1 என வெற்றிக் கொண்டது இந்தியா.