லண்டன்: அமெரிக்காவில் பல்கலைக்கழக அளவிலான தேசிய நீச்சல் போட்டிகளில் அஞ்சல் நீச்சலில் நான்கு தங்கங்களை வென்ற உற்சாகத்தோடு லண்டனுக்குப் பறந்தார் ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று தந்த ஜோசஃப் ஸ்கூலிங், 21 (படம்). செல்சி காற்பந்துக் குழுவின் தீவிர ரசிகரான இவர் ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் அரங்கில் நேற்று செல்சி-கிரிஸ்டல் பேலஸ் குழுக்கள் மோதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டத்தை நேரில் கண்டு ரசித்தார். செல்சி குழு விளையாடிய ஆட்டத்தை இவர் நேரில் காண்பது இதுவே முதன்முறை. இது பற்றிக் கருத்துரைத்த ஸ்கூலிங், "ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜுக்கு ஒவ்வொரு நாளும் செல்ல முடியாது. இது முதல் முறை என்பதால் முழுமையாக அனுபவித்து மகிழ விரும்புகிறேன்," என்றார்.
செல்சி குழு ஆட்டத்தை நேரில் பார்க்கச் சென்ற சிங்கப்பூர் பிரபலம்
1 mins read
-

