பார்சாவுக்காக 100 கோல்

பார்சாவுக்காக 100 கோல்

1 mins read
46813cbe-6337-462e-b725-f49a062c9802
-

கிரனாடா: ஐரோப்பாவின் முன் னணி காற்பந்துக் குழுக்களில் ஒன்றான ஸ்பெயினின் பார்சி லோனா சார்பில் நூறு கோல்களை அடித்த மூன்றாவது பிரேசில் வீரர் எனும் பெருமையைப் பெற்று இருக்கிறார் நெய்மார். பட்டியலின் கடைநிலைக்கு முந்திய நிலையிலுள்ள கிரனாடா குழுவிற்கு எதிராக நேற்று அதி காலை நடந்த ஸ்பானிய லா லீகா ஆட்டத்தில் பார்சிலோனா 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி இல்லாத நிலையிலும் சுவாரெஸ், அல்காசெர், ரகிட்டிச், நெய்மார் ஆகியோர் அடித்த கோல்களால் பார்சா அபார வெற்றி பெற்றது.