லெகனேஸ்: ஸ்பானிய லா லீகா காற்பந்து ஆட்டமொன்றில் லெகனேஸ் குழுவை 2=4 என வீழ்த்திய ரியால் மட்ரிட் குழு, பட்டியலில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்தது. இதற்காக லெகனேஸ் குழுவிற்கு எதிராக மட்ரிட் கடுமையாக போராட வேண்டியிருந்தது. அதேசமயம் மட்ரிட்டின் நட்சத்திர வீரர்கள் ரொனால்டோ, கேரத் பேல் இந்த ஆட்டத்தில் களமிறங்காத நிலையில் அக்குழு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடந்த மற்றோர் ஆட்டத்தில் பார்சிலோனா, செவியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதால் பார்சிலோனா, மட்ரிட் அணிகளுக்கு இடையிலான புள்ளிகள் இடைவெளி இரண்டாக குறைந்துள்ளது.
முதலிடத்தில் மட்ரிட்
1 mins read

