போர்ன்மத்: காற்பந்துப் போட்டியில் மிகவும் நெருக்கடியான நிலையில், செல்சி வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறி உள் ளார் செல்சி நிர்வாகி கோண்டே. இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் எவர்ட்டனை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பட்டத்தை வெல்லும் கனவோடு உள்ள செல்சிக்கு ஸ்பர்ஸ் குழு வின் இந்த வெற்றி பெரும் நெருக் கடியாக அமைந்தது. இந்நிலையில், சிங்கப்பூர் நேரப் படி நேற்று காலை விளையாடிய செல்சி 3-1 என போர்ன்மத்தை வெற்றி கொண்டது. போர்ன்மத் வீரர் புகுத்திய சொந்த கோலைத் தொடர்ந்து ஈடன் ஹசார்ட் அடுத்த கோலைப் புகுத்தினார். பிற்பாதி ஆட்டத்தில் அலன்சோ இன்னுமோர் கோலைப் புகுத்த 3=1 என வெற்றி பெற்றது செல்சி. இதற்கிடையே, 42வது நிமிடத் தில் போர்ன்மத்திற்கான ஆறுதல் கோலைப் புகுத்தினார் கிங்.
'நெருக்கடி நல்ல முடிவைத் தரும்'
1 mins read

