மியூனிக்: மூன்றாண்டுகளுக்கு முன் ஸ்பெயினின் ரியால் மட்ரிட் காற்பந்துக் குழு, ஜெர் மனியின் பயர்ன் மியூனிக் குழு வைத் தோற்கடித்து சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிய போது அதன் நிர்வாகியாகச் செயல்பட்டவர் கார்லோ அன்ச லோட்டி. அவருக்கு உதவியாக இருந்தவர் ஸினடின் ஸிடான். 2015ல் ரியாலைவிட்டு நீக்கப் பட்ட அன்சலோட்டி இப்போது பயர்ன் குழுவின் நிர்வாகியாக இருந்து வருகிறார். அவரிடம் பாடம் கற்ற ஸிடான், ரியால் குழுவின் இன்றைய நிர்வாகி. இப்படி ஆசான்-மாணவன் என்ற உறவைத் தாண்டி, நல்ல நண்பர்களாகவும் இருந்தவர்கள், இப்போது களத்தில் எதிரிகளாக நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
எதிரிகளான நண்பர்கள்
1 mins read

