மான்செஸ்டர்: யூரோப்பா லீக்கின் காலிறுதிச் சுற்றில் மான்செஸ்டர் யுனைடெட் விளையாடி வரு கிறது. இதில் சிறப்பாகச் செயல்பட்டு அரையிறுதிக்குத் தகுதி பெற யுனைடெட் இலக்கு கொண்டுள்ளது. இருப்பினும், யூரோப்பா லீக் கில் மட்டும் தங்களது கவனம் இருக்காது என்று குறிப்பிட்ட யுனைடெட்டின் நிர்வாகி ஜோசே மொரின்யோ, இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி யிலும் முழு கவனம் செலுத்தப் படும் என்று உறுதியளித்துள்ளார். இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் வருவதே தமது பிரதான இலக்கு என்று அவர் தெரிவித்தார்.
'முதல் நான்கு இடங்களே இலக்கு'
1 mins read

