புதிய அவதாரம்

புதிய அவதாரம்

1 mins read
985912a3-d9c5-4cfb-adf6-48de92a1e7be
-

கோல்கத்தா: தனது மந்திர சுழற்பந்து வீச்சால் எதிரணியினரை மிரட்டி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான சுனில் நரைன், அதிரடி பந்தடிப்பாளராகப் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தியாவில் நடந்துவரும் ஐபிஎல் போட்டிகளில் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் நரைன். நேற்று முன்தினம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இவர் பந்துவீச்சு, பந்தடிப்பு என இரு துறைகளிலும் மிளர்ந்து தமது அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார்.