ஊக்கமருந்து: ஆப்கன் வீரர் சிக்கினார்

ஊக்கமருந்து: ஆப்கன் வீரர் சிக்கினார்

1 mins read
3d910b12-1faf-4a67-b700-2eb5b0a84659
-

துபாய்: அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் முகம்மது ஷஸாத் (படம்) தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை எடுத்துக் கொண்டதாக அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 17ஆம் தேதி துபாயில் உள்ள ஐசிசி பயிலகத்தில் நடந்த ஒரு போட்டியில் ஷஸாத் கலந்துகொண்டார். அப்போது இவரிடமிருந்து பெறப்பட்ட சிறுநீர் மாதிரியைச் சோதனை செய்த போது அதில் 'கிளென்பியூட்டரால்' எனும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து இருந்தது கண்டறியப்பட்டது.