மும்பை: கிரிக்கெட் விளையாட்டின் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டைப் போல மற்ற விளையாட்டுகளும் இந்தியாவில் பிரபலமடைய முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில், இந்திய சூப்பர் லீக் காற்பந்து அணிகளில் ஒன் றான கேரளா பிளாஸ்டர்ஸ் உரிமை யாளர்களில் ஒருவராக இருக்கும் சச்சின், இப்போது கபடி விளை யாட்டிலும் கால்பதிக்கவுள்ளார். ஆண்டுதோறும் நடத்தப்படும் 'புரோ கபடி லீக்'கில் இவ்வாண்டு புதிதாக நான்கு அணிகள் சேர்க்கப்படவுள்ளன. அதில் ஓர் அணி தமிழகத்தை மையமாகக் கொண்டது. இன்னும் பெயரிடப்படாத அந்த அணியின் இணை உரிமையாள ராகிறார் சச்சின். ஹரியானா, குஜராத், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை மையமாகக் கொண்டு மற்ற மூன்று அணிகள் உருவாகவுள்ளன. டெல்லி, மும்பை, பெங்களூரு, கோல்கத்தா, ஹைதராபாத், பாட்னா, புனே, ஜெய்ப்பூர் என இப்போதுள்ள எட்டு அணிகளு டன் சேர்த்து மொத்தம் 12 அணி களுடன் ஐந்தாவது புரோ கபடி லீக் ஜூலை-அக்டோபர் மாதங் களில் நடக்கவிருக்கிறது.
தமிழக கபடி அணியை வாங்குகிறார் சச்சின்
1 mins read

