புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக உள்ள அனில் கும்ளேவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய பயிற்றுவிப் பாளரைத் தேடுகிறது பிசிசிஐ. விராத் கோஹ்லி தலைமை யிலும் அனில் கும்ளேவின் பயிற்சியிலும் இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டதாக பிசிசிஐ பாராட்டுத் தெரிவித்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரோடு அனில் கும்ளேவின் பயிற்றுவிப்பாளர் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய பயிற்றுவிப்பாளரைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது. பிசிசிஐ அமைத்துள்ள 3 பேர் கொண்ட ஆலோசனைக் குழு புதிய பயிற்றுவிப்பாளரைத் தேர்வு செய்யும்.
இந்தக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களே புதிய பயிற்றுவிப்பாளருக்கான நேர்முகத் தேர்வை நடத்துவார்கள். கும்ளே பயிற்றுவிப்பாளராக இருந்த காலகட்டத்தில் இந்தியா மொத்தம் விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் 12ல் வெற்றி பெற் றது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் டில் இழந்த முதல் இடத்தையும் மீண்டும் பிடித்தது. இந்நிலையில், இந்திய கிரிக் கெட் அணியின் புதிய பயிற்றுவிப் பாளருக்கான விண்ணப்பங்களை விநியோகித்து அதற்கான தேர்வு பணிகளைத் தொடங்கியுள்ளதாக பிசிசிஐ அறிவித்தது. கும்ளே இப்பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்தால், அவரது விண் ணப்பம் நேரடி தேர்வு முறையில் பரிசீலிக்கப்படும்.

