லண்டன்: சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியையொட்டி பயிற்சி ஆட்டங்கள் நேற்று முன்தினம் தொடங்கின. முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா=இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பந்தடித்த இலங்கை அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ஓட்டங்கள் எடுத்தது. அணித் தலைவர் மேத்யூஸ் அதிகபட்சமாக 95 ஓட்டங்களும் குணரத்னே 70 ஓட்டங்களும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 319 ஓட்டங்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது. ஆரோன் ஃபிஞ்ச் 137 ஓட்டங்களுடனும் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 85 ஓட்டங்களுடனும் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டனர்.
கிரிக்கெட்: பயிற்சி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
1 mins read

