சுதிர்மான் பூப்பந்துக் கிண்ணப் போட்டி: இறுதிச் சுற்றுக்கு தென்கொரியா தகுதி

சுதிர்மான் பூப்பந்துக் கிண்ணப் போட்டி: இறுதிச் சுற்றுக்கு தென்கொரியா தகுதி

1 mins read
2ba38059-bb57-42fd-aef4-0f76c0fb8828
-

கோல்டு கோஸ்ட்: சுதிர்மான் பூப்பந்துக் கிண்ணப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தென்கொரியா தகுதி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இதுவரை மூன்று முறை கிண்ணம் ஏந்தியுள்ள தென்கொரியா நேற்று நடைபெற்ற அரையிறுதியில் தாய்லாந்தை 3=1 எனும் புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது. அரையிறுதியின் முதல் சுற்றில் தாய்லாந்து வெற்றி பெற்றது. தென்கொரியாவின் கலப்பு இரட்டையர் ஜோடியை 41 நிமிடங்களில் 21=16, 21=12 எனும் புள்ளிக் கணக்கில் தாய்லாந்து ஜோடி வீழ்த்தியது. முதல் சுற்றில் எதிர்பாராத தோல்வியைத் தழுவிய தென் கொரியா துவண்டுவிடாமல் போராடியது. அடுத்த சுற்றில் ஆண் களுக்கான ஒற்றையர் பிரிவு வீரர்கள் களமிறங்கினர். இதில் தாய்லாந்து வீரரை 18-21, 21-10, 21-17 எனும் புள்ளிக் கணக்கில் தென்கொரிய வீரர் முறியடித்தார். இதையடுத்து, ஆண்களுக் கான இரட்டையர் ஜோடிகள் இடையே பலப்பரிட்சை நடை பெற்றது. இதில் சிறப்பாகச் செயல்பட்ட தென்கொரிய ஜோடி 21-13, 21-16 எனும் புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடி தாய்லாந்து வீரர்களைத் திணறடித்த தென்கொரிய ஜோடி. படம்: ஏஎஃப்பி