லண்டன்: சிறிய கிரிக்கெட் உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் வெற்றியாளர் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி மீது மீண்டும் மீண்டும் ஏமாற்றத்தைக் கொட்டித் தீர்த்துள்ளது மழை. இங்கிலாந்தில் நடந்து வரும் இப்போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பங்ளாதேஷ், 'பி' பிரிவில் நடப்புச் சாம்பியன் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ் தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குத் தகுதிபெறும்.
இன்னும் குறைந்தது 4 ஓவர்கள் விளையாடினால் போட்டிக்கு டக்வொர்த் லீவிஸ் முறையில் முடிவு கிடைக்கும் என்ற நிலையில், மழை வந்து முடிவுக்கு வேட்டு வைத்தது. குறிப்பாக, இன்னும் குறைந்தது 4 ஓவர்கள் விளையாடினால், போட்டிக்கு 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் முடிவு கிடைக்கும் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
ஆஸ்திரேலியா - பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி மழை காரணமாக தடைபட்டது. படம்: ராய்ட்டர்ஸ்

