மெக்சிகோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குச் சென்றது ஜெர்மனி

மெக்சிகோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குச் சென்றது ஜெர்மனி

1 mins read

சோச்சி (ர‌ஷ்யா): ர‌ஷ்யாவின் சோச்சி நகரில் உள்ள ஃபி‌ஷ்ட் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடந்த கான்ஃபெடரே‌‌ஷன் கிண்ண அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அந்த ஆட்டத்தில் மெக்சிக்கோ வெற்றி பெறுவதற்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தும் அவற்றை அந்த அணியின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் கோட்டைவிட்டனர். அதை ஜெர்மணியின் ஜெர்மனியின் இளைய ஆட்டக்காரர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு வெற்றி பெற்றனர்.

இந்த ஆட்டத்தில் இரு அணியினரின் ஆட்டத்தை ஒப்பிடும்போது மெக்சிகோ ஆக அதிகமாக அதாவது 58 விழுக்காடு பந்தை தங்கள் வசம் வைத்திருந்தது. அத்துடன் 25 முறை கோல் போட முயன்று ஒரே ஒரு கோல் மட்டும் போட்டு தோற்றது. நான்கு கோல்கள் போட்டு வெற்றிபெற்ற ஜெர்மனி அணியினர் 12 முறை கோல் முயற்சி செய்து 4 கோல்கள் போட்டு வென்றனர்.

ஆட்டம் தொடங்கி முதல் 8 நிமிடங்களில் ஜெர்மனியின் கொரெட்ஸ்கா 2 கோல்களைப் போட்டார். ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் டிமோ வெர்னர் மற்றும் யூனிஸ் மேலும் இரண்டு கோல்களைப் போட்டனர். ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் மெக்சிக்கோவின் மார்சியோ ஃபேபியன்ஸ் அற்புதமான் கோல் ஒன்றைப் போட்டு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். அரை இறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்ற ஜெர்மனி, நாளை சிலி நாட்டு அணியினருடன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பொருதவுள்ளது.