தென்கிழக்காசிய விளையாட்டு: காற்பந்துப் போட்டிகளில் ஒரே பிரிவில் சிங்கப்பூர், மலேசியா

தென்கிழக்காசிய விளையாட்டு: காற்பந்துப் போட்டிகளில் ஒரே பிரிவில் சிங்கப்பூர், மலேசியா

1 mins read

அடுத்த மாதம் மலேசியாவில் நடக்கவிருக்கும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் காற்பந்து விளையாட்டில் சிங்கப்பூரும் மலேசியாவும் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளன. மியன்மார், புருணை, லாவோஸ் ஆகியவை 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள மற்ற அணிகள். நடப்பு வெற்றியாளரும் தென்கிழக்காசியாவில் பலம் வாய்ந்த அணியாகவும் கருதப்படும் தாய்லாந்துடன் இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் திமோர் லெஸ்டே, கம்போடியா ஆகிய அணிகள் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவை ஒப்புநோக்கையில் 'ஏ' பிரிவு சற்று எளிதாக இருப்பதாகக் கருதப்படுவதால் 23 வயதுக்குட்பட்டோருக்கான சிங்கப்பூர் குழு இம்முறை அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதி என்று நம்பப்படுகிறது. 2015ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டிகளில் சிங்கப்பூர் குழு அரை இறுதி வாய்ப்பை எட்டவில்லை. அதற்குமுன் 2013ல் மியன்மாரில் நடந்த போட்டிகளில் அக்குழு 2=1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது. 29வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 19ஆம் தேதி கோலாலம்பூரில் தொடங்கவுள்ளன.2017-07-09 06:00:00 +0800