தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி தோற்றது

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி தோற்றது

2 mins read
9e44ada9-3e2a-448c-bd01-7de533bd948c
-

லெஸ்டர்: இங்கிலாந்தில் நடை பெற்று வரும் பெண்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றது. முன்னதாக பூவா தலையாவில் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்துக் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டு களை இழந்து 273 ஓட்டங்களைக் குவித்தது. தென்ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லெஸ்லி லீ 65 பந்துகளில் 92 ஓட்டங்களைக் குவித்தார். கேப்டன் டேன் வான் நிகெர்க் 57 (66) ஓட்டங்கள் எடுத் தார்.

இந்தியா சார்பில் ‌ஷிகா பாண்டே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிஸ்த், கவுர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டு களை வீழ்த்தினர். 274 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கள மிறங்கிய இந்திய அணியின் தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை வரிசையாக இழந்தது. தீப்தி ஷர்மா நிலைத்து நின்று 60 (111) ஓட்டங்களும், ஜுலான் கோஸ்வாமி 43 (79) ஓட்டங்களும் குவித்தனர். கேப்டன் மித்தாலி ராஜ், கவுர், ‌ஷிகா பாண்டே, பூனம் பாண்டே ஓட்டங்கள் ஏதுமின்றி வெளியேற இந்திய அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்துத் தென்னாப் பிரிக்க அணி 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் டேன் வான் நிகெர்க் 4 விக்கெட்டுகளை வீழ்த் தினார். தொடர்ச்சியாக நான்கு வெற்றிகளைப் பெற்ற இந்திய அணி, இந்த உலகக் கிண்ண போட்டியில் முதல் தோல்வியைப் பதிவு செய்தது.