புவனேஸ்வர்: ஆசிய தடகள வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆசிய தடகள போட்டியில் அவர் வெல்லும் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். இவர் ஏற்கெனவே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவின் கோபி தொனக்கால் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம் 11 தங்கப் பதக் கங்களை வென்றுள்ள இந்தியா தொடர்ந்து பதக்கப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
அடுத்து உலக தடகள போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் அவருக்கு மாநில அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதே போல் 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற மற்றொரு தமிழக வீரர் ஆரோக்ய ராஜீவையும் பாராட்டி இருக்கிறார். லட்சுமணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் கராத்தே ஆர்.தியாக ராஜன், அவருக்கு தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஆசிய தடகள வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் தேசியக் கொடியுடன் வெற்றியைக் களிக்கிறார். படம்: தமிழக ஊடகம்

