லண்டன்: இங்கிலாந்தில் பெண் களுக்கான 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்தை எதிர் கொண்டது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்பதால், வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற நிலையோடு இந்தியா களம் இறங்கியது. நியூசிலாந்து அணி பூவா தலையாவில் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா, மிதாலி ராஜ் (109), ஹர்மன் ப்ரீத் கவுர் (60), வேதா கிருஷ்ண மூர்த்தி (45 பந்தில் 70 ஓட்டங்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் குவித்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சு வீராங்கனை காஸ்பெரெக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். பின்னர் 266 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக் குடன் நியூசிலாந்து வீராங்கனை கள் களம் இறங்கினார்கள். அந்த அணியின் தொடக்க வீராங் கனைச் சுஷி பேட்ஸ் 1 ஓட்டம் எடுத்த நிலையில் ஷிகா பாண்டே பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீராங்கனை ரசெல் பிரிஸ்ட்டை 5 ஓட்டத்தில் வெளியேற்றினார் கோஸ்வாமி. இதனால் நியூசிலாந்து அணி 7 ஓட்டங்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த சட்டர்வைட் 26 ஓட்டத்திலும் கேதே மார்ட்டின் 12 ஓட்டத்திலும் அவுட் ஆனார்கள்.
இருவரும் அவுட்டாகும்போது நியூசிலாந்து 5 விக்கெட் இழப் பிற்கு 52 ஓட்டங்கள் எடுத் திருந்தது. அதன்பின் வந்த நியூசிலாந்து வீராங்கனைகள் சீட்டுக்கட்டுகள் போல் மளமளவெனச் சரிந்தனர். கடைசி ஐந்து விக்கெட்டுக்களை 27 ஒட்டத்திற்குள் இழந்து, 79 ஓட்டத்தில் ஆல்அவுட் ஆனது நியூசிலாந்து. நியூசிலாந்து வீராங்கனைகளை 25.3 ஓவருக்குள் ஆல்அவுட் டாக்கிய இந்தியா, 186 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னே றியது. இந்திய அணி சார்பில் ராஜேஸ்வரி கயாக்வார்ட் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றி அசத்தினார். இதனால் இந்தியா 186 ஓட்டம் வித்தியாசத்தில் வென்று அரை யிறுதிக்குத் தகுதி பெற்றது. இந்தியா 7 ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வி பெற்று 10 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்தது.

