சிங்கப்பூர் அரங்கில் செல்சியை வீழ்த்தியது பயர்ன் மியூனிக்

சிங்கப்பூர் அரங்கில் செல்சியை வீழ்த்தியது பயர்ன் மியூனிக்

1 mins read
0dfe5a3b-b0dd-4b07-bdfe-0eff3f888b5c
-

சிங்கப்பூர் விளையாட்டு அரங்கம் நிரம்பி வழிய நேற்று நடைபெற்ற அனைத்துலக வெற்றியாளர்கள் கிண்ண காற் பந்துப் போட்டியின் முதல் ஆட்டத்தில் நடப்பு இங் கிலிஷ் பிரிமியர் லீக் வெற்றியாள ரான செல்சி குழு ஜெர்மனியின் புண்டஸ்லீகா வெற்றியாளரான பயர்ன் மியூனிக்கை வீழ்த்தியது. ஆட்டத்தின் 6ஆவது நிமிடத்திலேயே பயர்ன் குழுவின் ரஃபினா முதல் கோலைப் போட அடுத்த 20 நிமிடங்களிலேயே பயர்னுக்காக மேலும் இரண்டு கோல்களைப் போட்டார் தாமஸ் முல்லர். முதல் பாதி ஆட்ட நேர முடிவில் மார்கோஸ் அலோன்ஸே„ செல்சி குழுவிற்காக ஒரு கோல் போட்டார். பிற்பாதி ஆட்டத்தில் செல்சி முனைப்புடன் விளையாடியது. ஆனால் ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில்தான் செல்சியால் மட்‌ஷுயாயி மூலம் ஒரு கோல் போட முடிந்தது. இறுதியில் ஆட்டத்தை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது பயர்ன். நாளை இத்தாலியின் இன்டர் மிலான் குழுவுடன் பயர்ன் பொருதுகிறது. சனிக்கிழமை செல்சியும் இன்டரும் மோதுகின்றன.

பயர்ன் குழுவிற்காக 2 கோல்கள் போட்ட தாமஸ் முல்லரைப் (இடமிருந்து இரண்டாவது) பாராட்டும் சக குழுவினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்