கார் பந்தயம்: முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டார் வெட்டல்

கார் பந்தயம்: முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டார் வெட்டல்

1 mins read
5dcf0290-02ee-4a8c-852e-60d43f06df1a
-

புடாபெஸ்ட்: ஹங்கேரி எஃப்1 கார் பந்தயத்தை வென்ற செபஸ் டியன் வெட்டல், 202 என்ற ஒட்டுமொத்தப் புள்ளிகளுடன் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இதில் முதல் பந்தயத்தை முதல் நிலையில் இருந்து தொடங் கிய ஜெர்மனியின் செபஸ்டியன் வெட்டல் பந்தயத் தூரத்தை 1 மணி 39 நிமிடம் 46.713 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இந்தப் பருவத்தில் அவரது 4வது வெற்றி இதுவாகும். பின்லாந்து வீரர் கிமி ரெய்க் கோனன் 2வதாகவும் போட்டாஸ் 3வது இடத்தையும் இங்கிலாந் தின் லூவிஸ் ஹேமில்டன் 4வது இடத்தையும் பிடித்தனர். ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப் படையில் வெட்டலை அடுத்து, 188 புள்ளிகளுடன் ஹேமில்டன் 2வது இடத்திலும் 169 புள்ளி களுடன் போட்டாஸ் 3வது இடத் திலும் உள்ளனர். அடுத்த சுற்று கார்பந்தயம் ஆகஸ்டு 27ஆம் தேதி பெல்ஜியத் தில் நடக்கவுள்ளது.

வெற்றிக் களிப்பில் வெட்டல். படம்: ராய்ட்டர்ஸ்