கோலாலம்பூரில் நடைபெற்று வரும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் பிரிவு நீர்ப்பந்து விளையாட்டில் தாய் லாந்து குழுவை வீழ்த்தி சிங்கப்பூர் குழு வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கியது முதல் கடைசி வரை ஆதிக்கம் செலுத் தியது சிங்கப்பூர் குழு. முதல் பாதி ஆட்டம் வரை தாய்லாந்து குழு கோல் எதுவும் போடாத நிலையில், சிங்கப்பூர் குழு ஐந்து கோல்கள் முன்னி லையில் இருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் தாய் லாந்து இரண்டு கோல்கள் மட்டுமே போட்டது. இறுதியில் 13-2 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் குழு வெற்றி பெற்றது. இன்று நடைபெறவுள்ள அடுத்த ஆட்டத்தில் பிலிப்பீன்ஸ் குழுவை எதிர்கொள்கின்றனர் சிங்கப்பூர் வீரர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
நீர்ப்பந்து: தாய்லாந்தை வீழ்த்தியது சிங்கப்பூர் ஆடவர் குழு
1 mins read
-

