கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் மலேசிய காற்பந்துக் குழுவிடம் இளம் சிங்கப்பூர்க் குழு 2-1 என்ற கோல் கணக்கில் தோற்ற தற்கு வீரர்களின் உடற்தகுதிக் குறைவே காரணம் என்று கூறி இருக்கிறார் பயிற்றுவிப்பாளர் ரிச்சர்ட் டார்டி. "ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்த நிலையில் வென்றுவிடலாம் என்று எண்ணி னோம். ஆனால், வீரர்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் உள்ளதால் முற்பாதி ஆட்டத்தில் தாக்குப்பிடித்ததைப் போல் இறுதி வரை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை," என்றார் அவர். முதல் ஆட்டத்தில் மியன்மாரி டம் தோற்ற சிங்கப்பூர்க் குழு நேற்று முன்தினம் இரவு மலே சியக் குழுவை எதிர்கொண்டது. முற்பாதி ஆட்டத்தில் முதல் கோலை அடித்து சிங்கப்பூர்க் குழு முன்னிலை பெற்றாலும் பிற்பாதி ஆட்டத்தில் மாற்று ஆட்டக்காரர்கள் இரு கோல் களைப் புகுத்த, மலேசியக் குழு வெற்றியை ருசித்தது.
சிங்கப்பூர்க் குழு அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க அடுத்த தாக லாவோஸ், புருணை குழுக் களை வென்றாகவேண்டும். அது மட்டுமல்லாமல், முதல் இரண்டு இடங்களில் உள்ள மலேசியா, மியன்மார் குழுக்களில் ஏதாவது ஒன்று பின்னடைவைச் சந்தித்தால் மட்டுமே சிங்கப்பூர்க் குழு அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைக்கலாம்.

