கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் சிங்கப்பூருக்கான இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்று உள்ளனர் ஒருங்கிணைந்த நீச்சல் வீராங்கனைகளான டெபி சோ, மியா யோங். ஒருங்கிணைந்த நீச்சல் போட்டியின் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற இவர்கள், 75.1791 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தனர். மலேசிய வீராங்கனைகள் 2ஆம் இடத்தையும் இந்தோனீசிய வீராங்கனைகள் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். நேற்று முன்தினம் நடந்த தனிநபர் ஒருங்கிணைந்த நீச்சல் பிரிவில் டெபி சோ தங்கமும் மியா யோங் வெண்கலமும் வென்றிருந்தனர்.
ஒருங்கிணைந்த நீச்சல்; 2வது தங்கப் பதக்கம்
1 mins read

