நீர்ப்பந்து விளையாட்டில் இந்தோனீசியா - சிங்கப்பூர் சமநிலை

நீர்ப்பந்து விளையாட்டில் இந்தோனீசியா - சிங்கப்பூர் சமநிலை

1 mins read

கோலாலம்பூர்: நீர்ப்பந்து விளை யாட்டில் நடப்பு வெற்றியாளரான சிங்கப்பூர் குழு இந்தோனீசியா விடம் சமநிலை கண்டது. தென்கிழக்காசிய விளை யாட்டுப் போட்டிகளில் நேற்று சிங்கப்பூர் ஆடவர் குழு மூன்றா வது நீர்ப்பந்து போட்டியில் இந்தோனீசியாவோடு மோதியது. முற்பாதி நேரத்தில் சிங்கப்பூர் மூன்று கோல்களைப் புகுத்திய நிலையில், இந்தோனீசியா ஒரு கோல் மட்டுமே போட்டிருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் எழுச்சி பெற்ற இந்தோனீசியா, மேலும் இரண்டு கோல்களைப் புகுத்தி சமநிலை கண்டது. அது மட்டுமல்லாமல், கடைசி நேர ஆட்டத்தில் இந்தோனீசியா மேலும் ஒரு கோலைப் புகுத்தி 4=3 என முன்னிலை பெற்று சிங்கப்பூருக்கு அதிர்ச்சி அளித் தது. இதற்கிடையே, வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் இரு அணியில் இருந்தும் தலா ஒரு வீரர் வெளியேற்றப்பட்டார். கடந்த 1965ஆம் ஆண்டு முதல் தென்கிழக்காசிய விளை யாட்டுப் போட்டிகளில் 26 வெற்றி களைக் குவித்த சிங்கப்பூர் குழு, முதல் முறையாக நேற்று சமநிலை கண்டது.

இவ்வாண்டும் தங்கப் பதக் கத்தை வெல்ல வேண்டுமானால், மலேசியாவிற்கு எதிரான இன் றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றே யாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சிங்கப்பூர் குழு. இதற்கிடையே, திறந்தவெளி நீச்சலில் சிங்கப்பூர் வீரர் வெண் கலப் பதக்கம் வென்றுள்ளார்.