கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டி காற்பந்தில் சிங்கப்பூர் அதன் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதல் இரண்டு ஆட்டங்களில் மியன்மாரிடமும் மலேசியாவிடமும் சிங்கப்பூர் தோல்வி அடைந்தது. இதன் விளைவாக சிங்கப்பூர் குழு அரையிறுதிக்குள் நுழைவது கிட்டத்தட்ட முடிந்த கதைதான். இந்நிலையில், நேற்று முன்தினம் லாவோசுடன் சிங்கப்பூர் மோதியது. இதில் 2=0 எனும் கோல் கணக்கில் சிங்கப்பூர் வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கி மூன்று நிமிடங்களுக்குள் சிங்கப்பூரின் தௌஃபிக் தமது குழுவின் முதல் கோலைப் போட்டார். ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி இக்சான் ஃபாண்டி சிங்கப்பூரின் இரண்டாவது கோலைப் போட்டார்.
முதல் வெற்றியைப் பதிவு செய்த சிங்கப்பூர் காற்பந்துக் குழு
1 mins read

