வலைப்பந்து: இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்ற சிங்கப்பூர் மகளிர்

வலைப்பந்து: இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்ற சிங்கப்பூர் மகளிர்

1 mins read

கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று பிற்பகல் நடைபெற இருக்கும் வலைப்பந்துக்கான இறுதி ஆட்டத்துக்கு சிங்கப்பூர் அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தை அக்குழு 55=43 எனும் புள்ளிகள் கணக்கில் தோற்கடித்தது. இறுதி ஆட்டத்தில் போட்டியை ஏற்று நடத்தும் மலேசியாவை சிங்கப்பூர் மகளிர் சந்திக்கின்றனர். மற்றோர் அரையிறுதி ஆட்டத்தில் புருணையை மலேசியா 70=28 எனும் புள்ளிகள் கணக்கில் பந்தாடியது. 2015ஆம் ஆண்டு தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற மலேசியா இம்முறை சொந்த மண்ணில் தங்கம் வெல்ல குறி வைத்துள்ளது. கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான சிங்கப்பூரை மலேசியா 50-37 எனும் புள்ளிக் கணக்கில் தோற்கடித்தது.