பேருந்து விபத்தில் சிக்கி மியன்மார் சுவர்ப்பந்து வீரர்கள் காயம்

பேருந்து விபத்தில் சிக்கி மியன்மார் சுவர்ப்பந்து வீரர்கள் காயம்

1 mins read

கோலாலம்பூர்: புக்கிட் ஜாலிலில் உள்ள தேசிய சுவர்ப்பந்து மையத்துக்கு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கெடுக்கும் சுவர்ப்பந்து வீரர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் மியன்மாரைச் சேர்ந்த சில சுவர்ப்பந்து வீரர்கள் காயமுற்றனர். காயமடைந்த வீரர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது. பேருந்தில் இருந்த தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் வீரர்களுக்குக் காயம் ஏற்படவில்லை. இந்த வீரர்கள் பங்கெடுக்கும் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.