தென்கிழக்காசிய விளையாட்டுகளின் மகளிருக்கான 4x100 மீட்டர் அஞ்சல் நீச்சல் போட்டியில் சிங்கப்பூர் விராங்கனையர் தங்கம் வென்றுள்ளனர். அதுமட்டுமல்லாது, தென்கிழக்காசிய விளையாட்டுகள், தேசிய சாதனை நேரங்களை அவர்கள் முறியடித்தனர். அமேண்டா லிம், நட்டாஷா ஓங், சகோதரிகளான குவா ஜிங் வென், குவா டிங் வென் ஆகியோர் அடங்கிய சிங்கப்பூர் குழு பந்தயத்தை 3 நிமிடங்கள் 44.38 வினாடிகளில் முடித்தது.
4x100 மீட்டர் அஞ்சல் நீச்சல் போட்டியில் சிங்கப்பூர் மகளிர் முதலிடம்
1 mins read

