மலேசியாவில் நடைபெறும் 29வது தென்கிழக்காசிய விளையாட்டுகளின் திடல்தடப் போட்டிகளின் தகுதிச் சுற்றுகளும் இறுதிச் சுற்றுகளும் நேற்று மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன. புக்கிட் ஜலில் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் பதக்கம் வென்று தங்கள் நாடுகளுக்குப் பெருமை சேர்க்கும் முனைப்புடன் வீரர்களும் வீராங்கனையரும் களமிறங்கினர். மகளிருக்கான 400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் சிங்கப்பூரின் டிப்னா லிம் பிரசாத் (வலது) மின்னல் வேகத்தில் ஓடி வெள்ளிப் பதக்கத்தைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டார். படம்: லிம் சின் தாய்
400 மீட்டர் தடை ஓட்டப் போட்டியில் வெள்ளி வென்ற டிப்னா லிம் பிரசாத்
1 mins read
-

