பல்லகெலே: இலங்கைக்கு எதி ரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை வென்ற இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப் பற்றும் முனைப்பில் உள்ளது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமை யாகக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து 5 ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டத் தில் 9 விக்கெட் வித்தியாசத்திலும் 2வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று 2=0 என்ற கணக்கில் முன்னிலையில் உள் ளது. இந்த நிலையில், இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டிப் பல்ல கெலேவில் இன்று நடக்கிறது.
இன்றையப் போட்டியையும் வென்று இந்திய அணி தனது வெற்றிப் பயணத்தைத் தொடரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். ஆனால், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டு களைக் கைப்பற்றிய இலங்கை அணியின் ஆட்டம் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அமைந்துள்ளது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் சிறப்பாக ஆடியும் மத்திய வரிசை பந்தடிப் பாளர்கள் கோட்டைவிட்டனர். 8வது விக்கெட் ஜோடியான டோனி=புவனேஸ்வர் குமார் சிறப் பாக ஆடி இந்திய அணியைத் தோல்வியில் இருந்து காப்பாற்றி னர். இதனால் இன்றைய ஆட்டத் தில் இந்திய ஆட்டக்காரர்கள் மிகவும் கவனமுடனும் எச்சரிக்கை யுடனும் விளையாட வேண்டியது அவசியம்.

