கிளாஸ்கோ: உலகப் பூப்பந்து வெற்றியாளர் போட்டியில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் நொசோமி ஒகுஹாராவிடம் இந்தியாவின் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார். 19-21, 22-20, 20-22 எனும் செட் கணக்கில் சிந்து போராடித் தோற்றார். இந்தப் போட்டியில் வெற்றியாளர் பட்டம் வெல்லும் முதல் ஜப்பானிய பெண் எனும் பெருமை ஒகுஹாராவைச் சேரும். ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஐந்து முறை பட்டம் வென்ற சீனாவின் லின் டானை டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் 22-10, 21-16 என்று நேர்செட்களில் தோற்கடித்தார்.
போராடி தோற்ற பி.வி. சிந்து
1 mins read
-

