ஆர்சனலைப் பந்தாடிய லிவர்பூல்

ஆர்சனலைப் பந்தாடிய லிவர்பூல்

2 mins read
04c9a9d9-c91c-4b80-b77b-331a380f9370
-

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் ஆர்சனலை 4=0 எனும் கோல் கணக்கில் லிவர்பூல் பந்தாடி உள்ளது. ஆர்சனலுக்கு ஏற்பட்ட இந்த அவலநிலை அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சவுதாம்டனிடம் 4=0 எனும் கோல் கணக்கில் தோல்வி கண்டதை அடுத்து இதுவே ஆர்சனல் சந்தித்திருக்கும் ஆக மோசமான தோல்வி. தமது குழுவுக்கு ஏற்பட்டுள்ள இந்தப் படுதோல்வி ஒரு பேரிடர் என்று ஆர்சனலின் நிர்வாகி ஆர்சன் வெங்கர் வர்ணித்துள்ளார். படுதோல்வியைத் தொடர்ந்து, வெங்கர் பதவி விலகவேண்டும் என்று ஆர்சனல் ரசிகர்கள் மீண்டும் வலியுறுத்தி வரு கின்றனர். ஆர்சனல் தற்போது லீக் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளது. பட்டியலில் முன்னிலை வகிக்கும் மான்செஸ்டர் யுனை டெட்டைவிட அது ஆறு புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.

ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் லிவர்பூலின் கோல் மழை தொடங்கியது. ஃபிர்மினோ அனுப்பிய பந்து வலையைத் தொட்டது. இடைவேளைக்கு ஏறத்தாழ ஐந்து நிமிடங்கள் மட்டுமே எஞ்சி இருந்தபோது லிவர்பூலின் மானே தமது குழுவின் இரண்டாவது கோலைப் போட்டார். பிற்பாதி ஆட்டத்தில் ஆட்டத் தைச் சமன் செய்ய ஆர்சனல் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி யில் முடிந்தன. ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் முகம்மது சாலா லிவர்பூலின் மூன்றாவது கோலைப் போட்டார். இருபது நிமிடங்கள் கழித்து டேனியல் ஸ்டரிஜ் லிவர்பூலின் நான்காவது கோலைப் போட்டு ஆர்சனலின் கதையை முடித்து வைத்தார்.

லிவர்பூலின் நான்காவது கோலைப் போடும் டேனியல் ஸ்டரிஜ் (இடது). படம்: ராய்ட்டர்ஸ்