சிங்கப்பூரின் 50வது தங்கத்தை வென்ற சாஷா கிறிஸ்டியன்

சிங்கப்பூரின் 50வது தங்கத்தை வென்ற சாஷா கிறிஸ்டியன்

1 mins read
6e67aad6-e213-4417-b06e-37c08bfaf3e8
-

கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுகளின் பெண் களுக்கான நீர்ச்சறுக்குப் போட்டியில் சிங்கப்பூரின் சாஷா கிறிஸ்டியன் தங்கம் வென்றுள்ளார். இது இவ்வாண்டில் தென் கிழக்காசிய விளையாட்டு களில் சிங்கப்பூர் வென்றுள்ள 50வது தங்கப் பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டு மல்லாது, இது இப்போட்டியில் சாஷா வென்றுள்ள இரண் டாவது தங்கம். கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற போட்டியிலும் அவர் தங்கம் வென்றிருந்தார். நேற்று காலை பெண் களுக்கான ஸ்லாலோம் பிரிவின் இறுதிச் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் பிற நாட்டு வீராங்கனைகளைப் பின்னுக்குத் தள்ளினார் சாஷா. இரண்டாவது இடத்தை மலேசியாவும் மூன்றாவது இடத்தை இந்தோனீசியாவும் பிடித்தன.

பார்ப்பவர் கண்களைப் பறிக்கும் அளவுக்கு மிக அற்புதமாக நீர்ச்சறுக்கு சாகசங்களைச் செய்து பிற போட்டியாளர்களை விட அதிக புள்ளிகளைக் குவித்து தங்கம் வென்றார் சிங்கப்பூரின் சாஷா கிறிஸ்டியன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்