கிரிக்கெட்டில் சிங்கப்பூர் சாதனை

கிரிக்கெட்டில் சிங்கப்பூர் சாதனை

1 mins read
8851b34c-32ef-467f-ac77-0b64d35c247c
-

கோலாலம்பூர்: தென்கிழக்காசிய விளையாட்டுகளின் டி20 கிரிக் கெட் போட்டியில் சிங்கப்பூர் தங்கம் வென்று சாதனை படைத் துள்ளது. இவ்வாண்டு தென்கிழக்காசிய விளையாட்டுகளில் கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. சிலாங்கூரில் உள்ள கின்ராரா ஓவல் விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத் தில் போட்டியை ஏற்று நடத்தும் மலேசியாவுடன் சிங்கப்பூர் மோதி யது. முதலில் பந்தடித்த மலேசியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 117 ஓட்டங்கள் எடுத்தது. சிங்கப்பூர் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ஓட்டங்கள் எடுத்து மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

மலேசியாவின் விக்கெட்டைச் சாய்த்து கொண்டாட்டத்தில் இறங்கும் சிங்கப்பூர் கிரிக்கெட் அணியினர். ஒரே ஒரு பந்து எஞ்சி இருந்த நிலையில் மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிங்கப்பூர் அணி வெற்றி பெற்றது. படம்: ஸ்போர்ட் சிங்கப்பூர்