தென்கிழக்காசிய விளையாட்டு: 57 தங்கத்துடன் சிங்கப்பூர் நான்காமிடம்

தென்கிழக்காசிய விளையாட்டு: 57 தங்கத்துடன் சிங்கப்பூர் நான்காமிடம்

2 mins read
b70119c5-8cb0-458c-8cb5-b62fa27390f1
-

கோலாலம்பூர்: மலேசியத் தலை நகர் கோலாலம்பூரில் இம்மாதம் 19ஆம் தேதி தொடங்கிய 29வது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றன. பதினொரு நாடுகள் கலந்து கொண்ட இந்தப் போட்டிகளில் சிங்கப்பூர் 57 தங்கம், 58 வெள்ளி, 73 வெண்கலம் என மொத்தம் 188 பதக்கங்களைக் கைப்பற்றி பட்டியலில் நான்காமிடம் பிடித்தது. வெளிநாடுகளில் நடந்த தென் கிழக்காசிய விளையாட்டுப் போட் டிகளில் சிங்கப்பூரின் ஆகச் சிறந்த செயல்பாடு இது என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா 145 தங்கம் உட்பட 323 பதக்கங்களை வென்று பட்டி யலில் முதலிடம் பிடித்தது. தாய்லாந்து (72 தங்கத்துடன் 246 பதக்கங்கள்), வியட்னாம் (58 தங்கத்துடன் 168 பதக்கங்கள்) ஆகியவை முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தன.

கடைசி நாளான நேற்று சிங்கப் பூரின் பனிச்சறுக்கு விளையாட்டா ளர்கள் நான்கு வெள்ளிப் பதக்கங் களைக் கைப்பற்றினர். அனைத்துப் போட்டிகளும் முடிந்த பிறகு நேற்று செய்தியாளர் களைச் சந்தித்த சிங்கப்பூர்க் குழுவின் தலைவர் மிலான் குவீ, "சிங்கப்பூர் விளையாட்டாளர்களின் செயல்பாடு மிக அருமையாக இருந்தது. முதன்முறையாகப் பங் கேற்றவர்கள் எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையிலும் அனுபவ விளையாட் டாளர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையிலும் செயல்பட் டனர். உருட்டுப்பந்து, கோல்ஃப், சைக்கிளோட்டம் ஆகியவற்றில் கிட்டிய வெற்றி வியப்புக்குரிய, மகிழ்ச்சியான அம்சம்," என்றார்.

3,000 மீ. அஞ்சல் பனிச்சறுக்கில் லிம் சியா யேவிற்கு (நடுவில்) பின்னால் இருந்து உந்துதல் அளிக்கிறார் இன்னொரு சிங்கப்பூர் வீரர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்