சேம்பர்லேனை ஒப்பந்தம் செய்ய லிவர்பூல் இணக்கம்

சேம்பர்லேனை ஒப்பந்தம் செய்ய லிவர்பூல் இணக்கம்

1 mins read
7cf1d213-e5c5-484d-9e11-046e41684e71
-

லிவர்பூல்: ஆர்சனல், இங்கிலாந்து ஆகிய குழுக்களுக்காக விளை யாடும் அலெக்ஸ் ஒக்ஸ் லேட்=சேம்பர்லேனை 40 மில் லியன் பவுண்ட்டுக்கு ஒப்பந்தம் செய்ய லிவர்பூல் இணங்கி உள்ளது. ஒக்ஸ்லேட்=சேம்பர் லேனை ஒப்பந்தம் செய்ய செல்சி விருப்பம் தெரிவித்திருந்தது. ஆனால் செல்சியில் இணைய கடந்த செவ்வாய்க்கிழமையன்று 24 வயது ஒக்ஸ்லேட்=சேம்பர்லேன் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத் தக்கது. ஒக்ஸ்லேட்=சேம்பர்லேனை வாரத்துக்கு 180,000 பவுண்ட் டுக்கு ஒப்பந்தம் செய்து அவரைத் தக்கவைத்துக்கொள்ள ஆர்சனல் முயன்றது. ஆனால் இதையும் அவர் ஏற்க மறுத்தார். இதையடுத்து, லிவர்பூலுட னான ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திடுவார் என் றும் அவருக்கு வாரத்துக்கு 120,000 பவுண்ட் சம்பளமாகத் தரப்படும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இளம் மத்தியத் திடல் ஆட்டக்காரரான அலெக்ஸ் ஒக்ஸ்லேட்= சேம்பர்லேனை லிவர்பூல் ஐந்தாண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அவரை ஒப்பந்தம் செய்ய செல்சி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. லிவர்பூலுடன் ஒக்ஸ்லேட்= சேம்பர்லேன் இணைந்துள்ளதை அடுத்து, அக்குழு மேலும் வலிமை அடைந்து சிறப்பாகச் செயல்படக்கூடும் எனக் கருதப்படுகிறது. படம்: ஏஎஃப்பி